Search This Blog

Wednesday, 27 November 2013

அந்தமான் சிறையில் பவர்ஸ்டார்!

அந்தமான் சிறையில் பவர்ஸ்டார்!

நாலு பேரும் ரொம்ப நல்லவங்க
இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராசனின் மகன் ஜோ இயக்கும் படம் ‘நாலுபேரும் ரொம்ப நல்லவங்க'. இந்த படத்திற்காகத்தான் விசேஷ ட்ரிப் அடித்துள்ளார் பவர் ஸ்டார்.

இதிலும் பண மோசடிதான்
ஒரு குடும்பத்திடம் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராத டெரர் கேரக்டரில் நடிக்கிறாராம் பவர் ஸ்டார். ( நடிப்பது ஈசிதான்)

அந்தமான் சிறையில்
மோசடி வழக்கில் கைதாகும் பவரை அந்தமான் சிறையில் அடைக்கிறார்கள் . அதற்காக, செல்லுலார் சிறையில் சில காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் பவர்.

ஐ படத்தில் நீக்கமா?
பண மோசடி, சிறை என சுற்றி வருவதால் ‘ஐ' படத்தில் பவர் ஸ்டார் நடித்த காட்சிகளை ஷங்கர் நீக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. படம் ரிலீஸான பிறகுதான் பவர்ஸ்டார் ‘ஐ' படத்தில் இருக்காரா? இல்லையா? என்பது தெரியும்.

பவர் ஸ்டார் சீனிவாசன் அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது சீரியல் சிறை இல்லையாம். சினிமாவிற்காக சிறையில் இருந்துவிட்டு வந்திருக்கிறார்.
பண மோசடி புகாரில் சிக்கிய பவர்ஸ்டார் சீனிவாசன் சமீபத்தில் போலீஸ் விசாரணைக்காக டெல்லி, அந்தமான் வரைக்கும் போய் வந்தார். திகார் சிறையில் கூட சில மாதங்கள் கழித்தார்.
பெயிலில் ரிலீஸ் ஆகி சென்னை திரும்பிய பவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பவர் ஸ்டார் மீண்டும் அதே அந்தமானுக்கு சென்றுள்ளார். இப்போது போனது சூட்டிங்கிற்காகவாம்.

No comments:

Post a Comment