Search This Blog

Tuesday, 19 November 2013

ட்ரெண்ட்டை மாற்றும் விஜய்: சூசீந்திரன் படம்னா இருக்காதா பின்னே..?

ட்ரெண்ட்டை மாற்றும் விஜய்: சூசீந்திரன் படம்னா இருக்காதா பின்னே..?

கணக்குப் புள்ளைக்கும், கைப்புள்ளைக்கும் என்ன வித்தியாசமோ அந்தளவுக்கு இல்லாட்டியும் ஓரளவுக்கு வித்தியாசமா இருந்தா தான் ரசிகர்கள் மழைக்கு ஒதுங்கிற மாதிரி தியேட்டர் பக்கம் ஒதுங்குறாய்ங்க.

அப்படிப்பட்ட ரசிகர்களை தியேட்டர் வாசல்லேயே துரத்தி அனுப்புற வேலையைத் தான் பெரிய ஹீரோக்களோட படங்கள் பண்ணிக்கிட்டிருக்கு.

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், விமல் மாதிரியான ஹீரோக்களெல்லாம் ரிஸ்க்கே எடுக்காமல் ரஸ்க் சாப்பிட்டு விட்டுப்போக விஜய், விக்ரம் மாதிரியான மாஸ் ஹீரோக்களெல்லாம் 6 பேக்ஸ் வரை எல்லாவற்றையும் ட்ரை பண்ணி தோற்றுப் போய் விடுகிறார்கள்.

இதனால் தனது கேரியரின் லெவலை அடுத்த ஸ்டேஜுக்கு கொண்டுபோக புதுசா யோசிக்க ஆரம்பித்திருக்கிறார் நடிகர் விஜய்.

விஜய்யின் சமீபகால சினிமா வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அவருக்கு கமர்ஷியல் படங்கள் கொடுத்த ஹிட்டுகளை விட நல்ல கதையம்சம் அல்லது டைரக்டர் சொல்படி கேட்டு நடிச்ச படங்கள் தந்த ஹிட்டுகள் தான் அதிகம். இரண்டுக்குமே நண்பன், துப்பாக்கி ஆகிய படங்களை கை காட்டலாம்.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மாதிரியான படங்களை மனதாரப் பாராட்டும் விஜய் மாதிரியான மாஸ் ஹீரோக்கள் தாங்கள் நடிக்கும் போது மட்டும் ஏன் அந்த மாதிரியான வித்தியாசமான படங்களில் நடிப்பதில்லை என்று தெரியவில்லை.

இதற்கு ஒரு முடிவு கட்ட களம் இறங்கியிருக்கிறார் நடிகர் விஜய். ஆமாம், மணந்தால் மகாதேவி என்பது போல இனி நடித்தால் நல்ல கதையுள்ள படங்களில் நடிப்பது, இல்லையென்றால் வீட்டில் உட்கார்ந்து ரெஸ்ட் எடுப்பது இதுதான் விஜய்யின் திடமான முடிவாம்.

விஜய்யின் இந்த மனமாற்றத்துக்கு விஷாலின் பாண்டியநாடு படமும் காரணமாகச் சொல்கிறார்கள். படத்தில் விஷாலில் எளிமையான நடிப்பை பார்த்து அதிசயித்த விஜய் ஒரு மாஸ் ஹீரோவை எவ்ளோ அழகா ஹேண்டில் பண்ணியிருக்கீங்க… என்று டைரக்டர் சுசீந்திரனை கூப்பிட்டு மனதாரப் பாராட்டினாராம்.

அனேகமான சுசீந்திரனின் அடுத்த படத்தில் விஜய்யே ஹீரோவாக நடித்தாலும் நடிக்கலாம். விஜய்யின் இந்த நல்ல (மன) மாற்றத்தை நாமும் வரவேற்போமே..?

No comments:

Post a Comment