Search This Blog

Friday, 29 November 2013

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'

இன்று முதல் விஷால் ஒரு 'சிகப்பு மனிதன்'

சென்னை: விஷாலின் அடுத்த படமான நான் சிகப்பு மனிதனின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.
விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்த பாண்டியநாடு படம் வெற்றி பெற்றது. இதனால் அவர் மகிழ்ச்சியாக உள்ளார்.

நான் சிகப்பு மனிதன்  
இந்த தருணத்தில் அவர் நான் சிகப்பு மனிதன் என்னும் படத்தை தயாரித்து நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படத்தை விஷாலை வைத்து சமர் படம் இயக்கிய திரு எடுக்கிறார். பாண்டியநாடு படத்தை தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார் லக்ஷ்மி மேனன்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1985ல் வெளியான சூப்பர் ஹிட் படம் நான் சிகப்பு மனிதன். தற்போது அதே தலைப்பை விஷாலின் படத்திற்கு வைத்துள்ளனர். இந்த சிகப்பு மனிதன் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment