விஜய்யை திக்குமுக்காடச் செய்த மோகன்லாலின் அன்பு பரிசு
‘தலைவா’ படத்திற்கு விஜய் நடிக்கும் படம் ‘ஜில்லா’. விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை புதுமுக இயக்குனர் நேசன் இயக்குகிறார். பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் நடித்தபோது நடிகர் விஜய்யும், மோகன்லாலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பழகினர். அப்போது நடிகர் விஜய், மோகன்லாலை தன்னுடைய வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு விருந்து கொடுத்தார். இதற்கு பிரதிபலனாக நடிகர் மோகன்லால் விஜய் குடும்பத்தினரை தன்னுடைய வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் கேரளா பாணியில் விருந்து வைத்த மோகன்லால், நடிகர் விஜய்யின் ஓவியத்தையும் பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார். இந்த பரிசை கண்டு வியந்துபோன விஜய் பேச வார்த்தைகள் கிடைக்காமல் திக்கு முக்காடிப் போனாராம்.
No comments:
Post a Comment