Search This Blog

Sunday, 10 November 2013

நடிகை சுவேதா மேனனின் பாலியல் புகார் விளம்பரத்துக்காகவா?

நடிகை சுவேதா மேனனின் பாலியல் புகார் விளம்பரத்துக்காகவா?

எம்.பி. மீது புகார் கூறியது விளம்பரத்துக்காக அல்ல என்றார் நடிகை சுவேதா மேனன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் சுவேதா மேனன் பங்கேற்றார். அப்போது விழாவை ஏற்பாடு செய்திருந்த காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப் என்பவர் தன்னிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக பொலிசில் புகார் அளித்தார்.

இது பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இந்நிலையில் பீதம்பர குருப் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து புகாரை வாபஸ் பெற்றார் சுவேதா. இதனால் பிரச்சினை முடிவுக்கு வந்தது.

ஆனால் பீதம்பர குருப் ஆதரவாளர்கள் சிலர் சுவேதா மேனன் விளம்பரத்துக்காகவே இதுபோல் புகார் கூறினார் என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதைக்கேட்டு மீண்டும் கோபம் அடைந்திருக்கிறார் சுவேதா. அவர் கூறும்போது, ‘பப்சிட்டி தேடுவதற்காக நான் புகார் சொல்லவில்லை. பொது இடத்தில் என்னிடம் தவறாக நடக்க முயன்றவரை பற்றித்தான் புகார் செய்தேன். மும்பையில் ஹிந்தி படங்களில் நடித்தபோதுகூட நான் பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடித்ததில்லை. இதை மற்றவர்கள் உணர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment