Search This Blog

Thursday, 28 November 2013

அட, இதுவும் நல்லாயிருக்கே

அட, இதுவும் நல்லாயிருக்கே

பிரசன்னா நடித்திருக்கும் கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கியிருப்பதும் ஒரு பிரசன்னாதான். நடித்தவர் வெறும் பிரசன்னா என்றால் இயக்கியவர் ஆர்.எஸ்.பிரசன்னா.

டிசம்பர் 6 படம் திரைக்கு வரும் நிலையில் காசே செலவில்லாத புதுமுறை விளம்பரத்தை நடைமுறைப் படுத்தியிருக்கிறார் ஆர்.எஸ்.பிரசன்னா.

இன்று பெரும்பாலான படங்களின் தலைவிதியை சமூக வலைதளத்தில் வெளியிடப்படும் விமர்சனங்கள்தான் தீர்மானிக்கின்றன. படம் வெளியான அன்றே விமர்சனங்களால் நிரப்பிடுகிறார்கள் பாஸ்ட்ஃபுட் எழுத்தாளர்கள். இந்த பிராய்லர் எழுத்தாளர்களுக்கும் ஒரு மதிப்பு இருக்கவே செய்கிறது.

அப்படி ஃபேஸ்புக் பிராய்லர்களை கவர் செய்யும் விதத்தில் படம் சம்பந்தப்பட்ட அனைவரும் தங்களின் ஃபேஸ்புக் முகப்பு பக்கத்தில் தங்கள் திருமண புகைப்படத்தை பதிவேற்றியிருக்கிறார்கள். லோகா வாஷிங்டன்னுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதால் தனக்கு நெருங்கியவர்களின் திருமண ஆல்பங்களை பதிவேற்றியிருக்கிறாராம்.

தென்னிந்திய திருமண முறையை மையப்படுத்தி நகைச்சுவையுடன் கல்யாண சமையல் சாதம் உருவாகியிருக்கிறது. அதுதான் இந்த புதுமுறை விளம்பரம்.

No comments:

Post a Comment