ஹீரோ முக்கியமில்லை அமலா பால் அதிரடி முடிவுசினிமா
தலைவா படத்திற்கு பின், டாப் கியரில் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட அமலா பால், இப்போது, தனுசுடன், வேலையில்லா பட்டதாரி படத்தில், மட்டுமே புதிதாக கமிட்டாகி, நடித்து வருகிறார். இதையடுத்து, சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தில் நடிக்கிறார். தலைவாவுக்கு முன் வரை, முதல் வரிசை ஹீரோக்களுடன் மட்டுமே டூயட் பாடுவேன் என்று சொல்லி வந்த அமலா பால், இப்போது கிடைக்கிற வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும், உடனடியாக ஓ.கே., சொல்லும் முடிவில் இருக்கிறார்.
இதுகுறித்து அமலா பால் கூறுகையில், சினிமாவில் படிப்படியாக வளர்ந்த நடிகை நான். விதார்த்துடன் நடித்த, மைனா படம் தான் என்னை உயர்த்தியது. அதனால், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதும், அதையே பிடிவாதமாக கடைபிடிக்கவில்லையே என்கிறார். மேலும் அவர் தற்போது, தமிழ், மலையாளம், தெலுங்கு என, மூன்று மொழிகளிலும், ஹீரோவை மனதில் கொள்ளாமல், கதைக்கு முதலிடம் கொடுத்தே படங்களை தேர்ந்தெடுத்து வருகிறேன் என்கிறார் அமலா பால்.
No comments:
Post a Comment