அனுஷ்காவோட ஹோட்டல்ல சுத்தினதை மட்டும் தான் பார்த்தீங்களா..?: அசராமல் அதிர வைத்த ஆர்யா!
எதையுமே வெளிப்படையாக பேசுவதில் கொஞ்சமும் கூச்சப்படாதவர் போலும் நடிகர் ஆர்யா. இன்றைய தேதியில் பல முன்னணி நடிகைகளுக்கு அவரின் அண்ணாநகர் கடையிலிருந்து தான் பிரியாணி போய்க் கொண்டிருக்கிறது.
அது போக புதிதாக தமிழுக்கு எந்த ஹீரோயின் வந்தாலும் அவரை தன்னுடைய பிரியாணி கடைக்குக் கூட்டிச் சென்று அவர்களுடன் ப்ரெண்ட்ஷிப்பை கண்டினியூவ் பண்ணி விடுவார் என்றும் சொல்கிறார்கள்.
இப்படி ஆர்யாவைச் சுற்றி நடிகைகளைப் பற்றிய சுவாரஷ்யங்கள் நிறைந்து கிடக்க, மேலும் ஒரு சுவாரஷ்யமான விஷயத்தை அவர் இன்று நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
இரண்டாம் உலகம் பிரஸ்மீட்டுக்கு வந்த ஆர்யாவிடம் “உங்களையும் அனுஷ்காவையும் அண்ணாசாலையில் உள்ள ஒரு ஃபைவ்ஸ்டார் ஹோட்டலில் ஜோடியாகப் பார்த்தேனே..?” என்றார் ஒரு ரிப்போர்ட்டார்.
இந்தக் கேள்விக்கு ஆர்யா தாம், தூம் என்று குதிப்பார் என்று பார்த்தால் “ அனுஷ்கா கூட மட்டும் தான் பார்த்தீங்களா..? வேற ஹீரோயின் கூடயெல்லாம் நீங்க என்னை பார்க்கலையா..? நீங்க ரொம்ப பின்னாடி இருக்கீங்க போல… என்று கூலாக பதில் சொன்னார். அவரது பக்கத்தில் இருந்த அனுஷ்காவோ இதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.
பிறகு ஆந்திராவுல ஹைதராபாத் பிரியாணி மாதிரி சென்னையில ஆர்யா கடை பிரியாணி தான் பேமஸ், நீங்க அவரோட கடைக்கு பிரியாணி சாப்பிட போயிருக்கீங்களா..? என்று அனுஷ்காவிடம் ஒரு ரிப்போர்ட்டர் கேட்டபோது கேள்வியின் அர்த்தம் புரியாமலேயே ஆமாம், ஆர்யா வெரி வெரி நஸ் பெர்ஷன், அவர் கூட ஓர்க் பண்றது ரொம்ப கம்பர்டெபுளா இருக்கு என்று கிட்டத்தட்ட கேள்விக்கான பதிலைப் போலவே ஒரு பதிலைச் சொன்னார்.
ஆனாலும் கூட நடித்த நடிகைகளிலேயே நயன்தாராவைத் தான் ஆர்யாவுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்ற ஆர்யாவிடம் அப்போ அனுஷ்கா பிடிக்காதா? என்று கேட்க இரண்டாம் உலகம் ரிலீசுக்கு அப்புறம் அவங்களைப் பிடிக்கும் என்றாரே பார்க்கலாம்.
அவரின் இந்தப் பதிலைக் கேட்டு பயபுள்ள என்னம்மா பிட்டு போடுது……. என்றுதான் சொல்லத் தோன்றியது.
No comments:
Post a Comment