Search This Blog

Monday, 28 October 2013

அனிருத்தை சந்திக்க மாட்டேன்! அடம்பிடிக்கும் ஆண்ட்ரியா!!

அனிருத்தை சந்திக்க மாட்டேன்! அடம்பிடிக்கும் ஆண்ட்ரியா!!

சினிமா பார்ட்டி ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத்- நடிகை ஆண்ட்ரியாவுக்கிடையே நடந்த முத்தச்சண்டை போட்டோக்கள் இணைய தளங்களில் வெளியானதால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார் ஆண்ட்ரியா. திட்டம் போட்டு என்னை கவிழ்த்து விட்டார் அனிருத் என்று அவரை கண்டபடி வசைபாடியவர், அதையடுத்து அவருடனான உறவையே முற்றிலுமாக முறித்துக்கொண்டார்.

அதனால், பல மாதங்களாக ஆண்ட்ரியாவை விட்டுப்பிடித்த அனிருத், வணக்கம் சென்னை படத்தின் மூலம் மீண்டும் நட்பை புதுப்பிக்க புதிய திட்டம் போட்டு தனது இசையில் ஒரு பாட்டு பாட வேண்டும் என்று மறுபடியும் ஆண்ட்ரியாவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், அதை அவர் ஏற்கவில்லை. அதையடுத்து அப்படத்தின் இயக்குனரான கிருத்திகா உதயநிதி தலையிட்டு, ஆண்ட்ரியாவை பாட வைத்தார்.

ஆனால், அனிருத்தை சந்திக்க மாட்டேன், அவர் முன்னிலையில் பாட மாட்டேன் என்று கண்டிசன் போட்ட ஆண்ட்ரியா, எங்கடி பொறந்தே என்ற அந்த பாடலின் ட்ராக்கை வாங்கி தனக்குத் தெரிந்த ஒரு ரெக்கார்ட்டிங் தியேட்டரில் பாடி கொடுத்து அனுப்பினாராம்.

இருப்பினும், என் இசையில் பாடவே மாட்டேன் என்று சொன்ன ஆண்ட்ரியா இப்போது பாடி விட்டார். அதனால் இப்படியே ஒவ்வொரு பாடலாக பாட வைத்து ஆண்ட்ரியாவுடன் மறுபடியும் உறவு வளர்த்து விடுவேன் என்று சொல்லும் அனிருத், எறும்பு ஊற கல்லும் தேயத்தானே செய்யும் என்று பழமொழியெல்லாம் பேசுகிறாராம்.

No comments:

Post a Comment