Search This Blog

Saturday, 26 October 2013

இரகசியமாக படமாக்கப்பட்ட நயன்தாராவின் கவர்ச்சி காட்சி

இரகசியமாக படமாக்கப்பட்ட நயன்தாராவின் கவர்ச்சி காட்சி

நயன்தாரா நடித்த கவர்ச்சி காட்சிகள் இரகசியமாக படமானது. பிரபுதேவாவை காதலித்த போது கவர்ச்சி காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நிபந்தனை போட்டு படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வந்தார்.

அவருடனான காதல் முறிந்த பிறகு மீண்டும் நடிக்க வந்தார். முன்பு இல்லாத அளவுக்கு இப்போது கவர்ச்சி காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

ஹிந்தியில் வித்யாபாலன் நடித்து வெளியான ‘கஹானி‘ படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. ஆரம்பத்தில் இப்படத்தில் நயன்தாராவை நடிக்க கேட்ட போது ஒப்புக் கொள்ளவில்லை. கர்ப்பிணியாகவும், கவர்ச்சி காட்சிகளிலும் நடிக்க வேண்டி இருந்ததால் மறுத்ததாக கூறப்பட்டது.

ஆனால் சம்பள விஷயத்தில் சமரசம் ஏற்படாததாலேயே ஓகே சொல்லவில்லை என்று கூறப்பட்டது. பின்னர் கோடிகளில் அவர் கேட்ட சம்பளத்தை தர தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்டபின் நடிக்க சம்மதித்தார்.

இப்படத்தில் கவர்ச்சி காட்சிகளில் துணிச்சலாக நயன்தாரா நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த கவர்ச்சி காட்சிகள் இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் கேமராமேன் உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பங்கேற்க இரகசியமாக நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment