Search This Blog

Wednesday, 23 October 2013

சஞ்சய் தத் தண்டனை காலம் குறைகிறது...?

சஞ்சய் தத் தண்டனை காலம் குறைகிறது...?

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் தண்டனை காலத்தை குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம், மகாராஷ்டிர அரசிடம் கருத்து கேட்டுள்ளது. இதனால் அவரின் தண்டனை காலம் குறைக்கப்படும் என தெரிகிறது.

1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டுவெடிப்பில் 250 பேர் கொல்லப்பட்டனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அளவுக்கு அதிகமாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அந்த தண்டனை ஐந்தாண்டு காலமாக குறைக்கப்பட்டது. ஆனால் சஞ்சய் தத் ஏற்கனவே ஒன்றரை வருடம் சிறை தண்டனை அனுபவவித்ததால் மீதமுள்ள மூன்றரை வருட சிறைவாசம் அனுபவித்து வருகிறார். சமீபத்தில் தான் பரோலில் வெளியே வந்தார்.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கும் படி சஞ்சய் தத் முறையிட்டு இருந்தார். அதன்படி மத்திய உள்துறை அமைச்சகம் சஞ்சய் தத்தின் தண்டனையை குறைப்பது தொடர்பாக மாநில அரசான மகாராஷ்டிரா அரசிடம் கருத்து கேட்டுள்ளது. மகாராஷ்டிரா அரசு கொடுக்கும் கருத்தை பொறுத்து சஞ்சய் தத்தின் தண்டனை குறைக்கப்படும் என தெரிகிறது.

No comments:

Post a Comment