ஸ்ரேயா கோஷலுடன் டூயட் பாடிய விஜய்!
இதுவரை, குத்துப் பாடல்களையே அதிகம் பாடி, பழக்கப்பட்ட விஜய், முதல் முறையாக, 100 சதவீத மெலோடி பாடலை, ‘ஜில்லா’ படத்துக்காக, சொந்தக் குரலில் பாடியுள்ளாராம். இந்த பாடலை, அவருடன் இணைந்து பாடியிருப்பது, பாலிவுட் குயில் ஸ்ரேயா கோஷல். பாடலின் வரிகளையும், ட்யூனையும், ஒரு மாதத்துக்கு முன்பே, விஜயிடம் கொடுத்து விட்டார்களாம். முதல் முறையாக பாடப் போகும் மெலோடி பாடல் என்பதால், பாடல் வரிகளையும், ட்யூனையும், பலமுறை கேட்டும், படித்தும், நன்றாக ஒத்திகை பார்த்து விட்டு, சமீபத்தில் தான், பாடிக் கொடுத்தாராம். பாடல், நன்றாக வந்திருப்பதாக கூறும் படக் குழு, ‘வழக்கமாக, விஜய் பாடும் பாடல்கள், அவரின் ரசிகர்களிடையே, ஹிட் ஆவது போல், இந்த பாடலும், ஹிட் ஆகும்’ என, நம்பிக்கையுடன் கூறுகிறது.
No comments:
Post a Comment