கதையை இயக்குவது யார்?
ஹாலிவுட்டில் இருந்து, கோடம்பாக்கத்துக்கு வரும் போதே, கைவசம், இரண்டு கருத்தாழமிக்க கதைகளுடன் வந்திறங்கினார் ஏ.ஆர்.ரகுமான். அதில், ஒரு கதையை தற்போது கையிலெடுத்திருப்பவர், யாரைக் கொண்டு இயக்கலாம் என்று, சில மாதங்களாக யோசித்து, இப்போது, தனுஷ் நடித்த, ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய, ஆனந்த் எல்.ராய் என்பவரை தேர்வு செய்துள்ளார்.இவர், ஏற்கனவே இந்தியில் இயக்கிய, ‘தனு வெட்ஸ் மனு’, ‘ராஞ்சனா’ என்ற இரண்டு படங்களுமே மெகா ஹிட் படங்கள் என்பதால், தன் ஸ்கிரிப்டையும், பெரிய வெற்றிப்படமாக்கி காட்டுவார் என்று நம்புகிறார் ரகுமான்.படம் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட தகவல்களை, விரைவில், அதிகாரப்பூர்வமாக அவர் வெளியிடுவார் என, தெரிகிறது.
No comments:
Post a Comment