வில்லியாக நடிக்க ஆசை: பிரியாமணி
‘பருத்திவீரன்’ கிராமத்து இமேஜை மாற்ற பிரியாமணி பெரும்பாடு பட்டார். ஆனாலும் தமிழில் தொடர்ந்து அதே மாதிரி கேரக்டர்களே வந்தன. அந்த இமேஜில் இருந்து வெளிவர கவர்ச்சிக்கு தயார் என அறிவிப்பு வெளியிட்டார். அதன்பிறகு தெலுங்கு படங்களில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக தோன்றினார்.
கவர்ச்சியில் தாராளம் காட்டியதால் இயக்குனர்களும், தங்கள் படங்களில் அவரை அரைகுறை ஆடையில் உரித்து காட்டினார்கள். ஆனாலும் தமிழ் படங்களில் இருந்து வாய்ப்புகள் வரவில்லை.
அடுத்து வில்லி வேடங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து பிரியாமணி கூறும்போது, சவாலான கேரக்டர்களில் நடிக்க விருப்பமாக இருக்கிறேன். குறிப்பாக வில்லத்தனமான வேடங்களில் நடிக்கவும் ஆசை உள்ளது என்றார்.
No comments:
Post a Comment