கோனே மீது வழக்குப்பதிவு!
கோச்சடையான் பட நாயகி தீபிகா படுகோனே இந்தியில் நடித்துள்ள படம் ராம்லீலா. ரன்வீர் சிங்குடன் தீபிகா நடித்துள்ள இப்படத்தை பன்சாலி இயக்கியுள்ளார். நவம்பர் மாதம் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், ராம்லீலா படத்தில் மத உணர்வுகளை காயப்படுத்துவது போன்ற காட்சிகளும், வசனங்களும் அதிகமாக இடம்பெற்றிருப்பதாக ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளாராம்.
இதையடுத்து, இது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் மற்றும் அதில் நடித்துள்ள ரன்வீர்-தீபிகா படுகோனே ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளதாம். இதனால் விரைவிலேயே போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர்கள் 3 பேரும் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஏற்கனவே பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா நடித்த தீவானி, சென்னை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால், இந்த படம் அந்த சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த தீபிகாவுக்கு இந்த வழக்கு விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.
No comments:
Post a Comment