கிசுகிசுவில் சிக்கிய இளம் ஹீரோக்கள்…
இப்போது ஜோடி சேர்ந்து நடிக்கும் ஹீரோயின்களை பார்க்கும் போது லேட்டாக திருமணம் செய்து கொண்டிருக்கலாமே என்று தோன்றுகிறது என்று தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறினார் இளம் ஹீரோ சிவகார்த்திக்கேயன்.
அப்போது அருகில் இருந்த தனுஷ் அர்தத்தோடு சிரித்து அதை ஆமோதித்தார். ஆகஸ்ட் 15ம் தேதி சிவகார்த்திக்கேயன், பிந்து மாதவி, சூரி ஆகியோரிடம் பேட்டி கண்ட தொகுப்பாளர் உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்க பிந்து மாதவி என்று உற்சாகமாக சொன்னார்
இந்த சூழ்நிலையில் இருவருக்கும் இடையே பத்திக்கிச்சு என்று கிசுகிசு பரவ, அதை சிவகார்த்திக்கேயன் மறுக்க ஊடகங்களில் இதுதான் சமீபத்திய ஹாட் நியூஸ். திருமணத்திற்குப் பின்னர் கிசுகிசுக்களில் சிக்கிய நடிகர்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.
கமல்
கமல் – வாணி திருமணத்திற்குப் பின்னர் சரிகா உடன் காதல் என்று கிசு கிசு பரவியது பின்னர் அதுவே உண்மையானது. இவர்களின் திருமணம் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் சிம்ரனுடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டவர் கமல். இதில் சரிகா உடன் விரிசல் ஏற்பட்டது.
விஜய்
சங்கீதாவை காதல் திருமணம் செய்து கொண்டவர் விஜய் 14 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் திரிஷா உடன் கிசுகிசுக்கப்பட்டார் விஜய். ஆனால் கிசு கிசு வந்த சுவடு தெரியாமல் அமுங்கிவிட்டது.
தனுஷ்
சூப்பர் ஸ்டார் மருமகனாக ஆன பின்னரும் நயன்தாரா, ஸ்ருதி என கிசுகிசுக்கப்பட்டவர் தனுஷ். ஊடகங்களில் அதுவும் பரபரப்பாக பேசப்பட்டது.
விமல்
பசங்க படத்தில் அறிமுகமான விமல் வளர்ந்து வரும் இளம் நடிகர். ஒரு சில படங்களில் ஜோடியாக நடித்த ஓவியா உடன் கிசுகிசு பரவியது.
சித்தார்த்
ஷங்கர் படத்தில் அறிமுகமான சித்தார்த் திருமணத்திற்குப் பின்னர் அதிகம் கிசுகிசுவில் அடிபட்டவர். அதனாலேயே திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது. பின்னர் சிலகாலம் ஸ்ருதி, தற்போது சமந்தா என கிசுகிசுக்கப்படுகிறார்.
சிவகார்த்திக்கேயன்
இந்த கிசுகிசுவில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் சிவகார்த்திக்கேயன். ஆனால் இது உண்மையில்லை, மனைவியைத்தான் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார். இதில் எது உண்மை என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்
No comments:
Post a Comment