ஷில்பா ஷெட்டியிடம் மன்னிப்பு கேட்ட கணவர் ராஜ்குந்த்ரா
அவர் தனது வியாபார நண்பரும், சூதாட்ட தரகருமான கோயங்கா மூலம் ஐ.பி.எல். போட்டியில் பெட்டிங்கில் (பந்தயம்) ஈடுபட்டார். ராஜ் குந்த்ராவிடம் போலீசார் 12 மணி நேரம் நடத்திய விசாரணையில் இதை தெரிவித்தார். ஆனால் இதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால் அவரை கைது செய்யவில்லை என்று டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஐ.பி.எல். பெட்டிங் குறித்து ஷில்பா ஷெட்டியிடம் ராஜ் குந்த்ரா மன்னிப்பு கேட்டுள்ளார். பிறந்தநாளையொட்டி டூவிட்டர் இணைய தளம் மூலம் அவர் ஷில்பாவிடம் மன்னிப்பை கேட்டு கொண்டார். அதோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.
இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரரான ரகானேவும் ஷில்பா ஷெட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment