Search This Blog

Wednesday, 8 May 2013

அஜீத் கொடுத்த பொங்கல் விருந்து!

அஜீத் கொடுத்த பொங்கல் விருந்து!

நடிகர் ஆர்யா தனது அம்மா சமைத்த பிரியாணியைத்தான் திரையுலக நண்பர்களை அழைத்து விருந்து கொடுப்பார். ஆனால், அஜீத்தோ, தனது கையாலே சமைத்த பிரியாணியை தான் நடிக்கும் படங்களின் யூனிட்டுக்கே விருந்து கொடுப்பார். அப்படி தான் சமைத்த பிரியாணியை யூனிட்டார் ருசித்து சாப்பிடுவதை ரசித்துப்பார்ப்பது அஜீத்துக்கு அலாதி பிரியமாம்.

அப்படிப்பட்ட அஜீத், சமீபத்திலும் ஒரு யூனிட்டுக்கு விருந்து வைத்திருக்கிறார். ஆனால். அது பிரியாணி விருந்து இல்லையாம். ஒரு சேஞ்சுக்காக பொங்கல் விருந்து வைத்தாராம். சிறுத்தை சிவா இயக்கும் யூனிட்டுக்குத்தான் அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. மேலும் தான் சமைத்த பொங்கலை தனது கையாலே பரிமாறியிருக்கிறார் அஜீத். அதை சாப்பிட்ட யூனிட்டார், அவரது மனசு போலவே சமைத்த சாப்பாடும் ரொம்ப டேஸ்டாக நிறைவாக இருந்தது என்று மனதார அஜீத்தை புகழ்ந்தனர்.

No comments:

Post a Comment