ஒருதலை காதலருடன் நடிக்க மறுத்தது ஏன்? ஆண்ட்ரியா பதில்
காதலை சொன்ன ஹீரோ மீது கோபம் அடைந்த ஆண்ட்ரியா, அவருடன் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார். இது குறித்து ஆண்ட்ரியா பதில் அளித்துள்ளார். மலையாளத்தில் அன்னயும் ரசூலும் படத்தில் பஹத் பாசில், ஆண்ட்ரியா ஜோடியாக நடித்தனர். இந்நிலையில் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக அறிவித்தார் பஹத். அதை ஆண்ட்ரியா ஏற்கவில்லை. பஹத் ஹீரோவாக நடிக்கும் புதிய படமாக ‘நார்த் 24 காதம் என்ற மலையாள படம் உருவாகிறது. இதில் மீண்டும் ஆண்ட்ரியா நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் பஹத்துடன் மீண்டும் இணைந்து நடிப்பதை தவிர்ப்பதற்காக அப்படத்தை உதறினார் ஆண்ட்ரியா. அவரை மாற்றிய இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் சுப்ரமணியபுரம் படத்தில் நடித்த சுவாதியை ஹீரோயினாக்கிவிட்டார். இது பற்றி சுவாதி கூறும்போது,‘நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் தேர்வு செய்தே நடிக்கிறேன். நார்த் 24 காதம் படத்தின் ஸ்கிரிப்ட் பிடித்ததால் ஒப்புக்கொண்டேன் என்றார். ஆண்ட்ரியா கூறும்போது, அனில் இயக்கும் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஏற்கனவே விஸ்வரூபம் பார்ட் 2க்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறேன் அதனால் இந்த பட ஷூட்டிங்கை 2 கட்டமாக வைத்துக்கொள்ளுங்கள் என்றபோது இயக்குனர் மறுத்துவிட்டார். இதையடுத்து படத்திலிருந்து விலகிவிட்டேன் என்றார்.
தங்களின் வருகைக்கு நன்றி
உங்கள் கருத்துகளை பதிவு செய்க
No comments:
Post a Comment