Search This Blog

Sunday, 19 May 2013

கேன்ஸ் படவிழாவில் ஐஸ்வர்யாராய்

கேன்ஸ் படவிழாவில் ஐஸ்வர்யாராய்


3028e700-694e-4e3d-bb0a-df60395cb06f_S_secvpfபிரான்சில் கேன்ஸ் படவிழா கடந்த 15-ந்தேதி துவங்கியது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன் இதில் கலந்து கொண்டார். நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ள வித்யாபாலனும் கேன்ஸ் படவிழாவுக்கு சென்றுள்ளார். ஐஸ்வர்யாராய் ஒவ்வொரு முறையும் கேன்ஸ் படவிழாவில் பங்கேற்பது உண்டு. இந்த தடவையும் வருவாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் நேற்று மும்பையில் இருந்து குழந்தையுடன் கேன்ஸ் படவிழாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கேன்ஸ் பட விழாவில் நாளை கொண்டாடப்படுகிறது. இதில் ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார்.
திங்கட்கிழமை அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. 26-ந்தேதி வரை படவிழா நடக்கிறது. அதுவரை ஐஸ்வர்யாராய் பிரான்சில் இருப்பார் என தெரிகிறது.

No comments:

Post a Comment