உதயம் என்எச் 4 யுகே வசூல்
வெற்றிமாறனின் கதை, வசனத்தில் உருவாகியிருக்கும் உதயம் என்எச்4 யுகேயில் இரண்டாவது வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. ஏப்ரல் 26 முதல் 28 வரை இதன் யுகே வசூல் 632 பவுண்ட்கள். இரண்டு திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது.
சென்ற ஞாயிறு வரை இதன் மொத்த யுகே வசூல் 5,840 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் 4.93 லட்சங்கள்.
யுஎஸ்-ஸில் சேட்டை நான்காவது வாரத்தை பூர்த்தி செய்துள்ளது. நான்காவது வார இறுதியில் – ஏப். 26-28 – இதன் யுஎஸ் வசூல் ஒரு திரையிடலில் 1,827 அமெரிக்கன் டாலர்கள். இதுவரை 87,260 டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இது நமது ரூபாய் மதிப்பில் 47.24 லட்சங்கள்.
உதயம் என்எச் 4-ன் தெலுங்குப் பதிப்பு யுஎஸ்-ஸில் இதுவரை 12.56 லட்சங்களை வசூலித்துள்ளது. யுகே தமிழ் பதிப்பைவிட இது அதிகம்.
சென்ற வெள்ளிக்கிழமை வெளியான வெங்கடேஷின் தெலுங்குப் படம் ஷேடோ, யுஎஸ்-ஸில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. முதல் மூன்று தினங்களில் 16.52 லட்சங்களை மட்டுமே இப்படம் வசூலித்துள்ளது.
No comments:
Post a Comment