Search This Blog

Thursday, 25 April 2013

ராஜஸ்தானில் அஜீத் பிறந்த நாள் கொண்டாட்டம்!

ராஜஸ்தானில் அஜீத் பிறந்த நாள் கொண்டாட்டம்!

டைரக்டர் சரண் இயக்கத்தில் அஜீத்-ஷாலினி இணைந்து நடித்த படம் அமர்க்களம். இந்த படத்தில் நடித்தபோதுதான் ஷாலினியை காதலித்தார் அஜீத். அப்போது ஒருநாள் தனது காதலை அவர் சொல்ல, ஷாலினியும் அதை ஏற்றுக்கொண்டார். அதையடுத்து அவர்களது திருமணம் 24.4.2000ல் அஜீத்-ஷாலினி திருமணம் நடைபெற்றது. அந்த வகையில் நேற்று அவர்களுக்கு 13வது திருமண நாள் ஆகும். அவர்களுக்கு அனோஸ்கா என்ற 5 வயது மகள் உள்ளார்.

இதையடுத்து, வருகிற மே 1-ம்தேதி அஜீத்துக்கு 42வது பிறந்த நாள் வருகிறது. அதை விமரிசையாக கொண்டாட அஜீத் ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். ஆனால், அஜீத்தோ அன்றைய தினத்தில் சென்னையில் இல்லையாம். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடித்துள்ள படத்தின் பேட்ஜ்ஒர்க் வேலைகள் ராஜஸ்தானில் நடப்பதால் அங்குதான் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறாராம். அன்றைய தினத்தில்தான அப்படத்தின் டைட்டீலையும் அறிவிக்கிறார் அஜீத்.

No comments:

Post a Comment