‘கோலிசோடா’ திருட்டு திரைக்கதையா..? : வெளிச்சத்துக்கு வந்த விஜய்மில்டனின் ‘அரைவேக்காட்டு’த்தனம்!
தமிழ்சினிமாவில் கதை திருடும் பழக்கம் எப்போதுமே ஒழியாது போலிருக்கிறது.
ஏற்கனவே இந்த ‘திருட்டுக்கதை’ விவகாரத்தில் டைரக்டர் விஜய் உள்ளிட்ட பல டைரக்டர்களின் தலைகளை உருள ஆரம்பித்து பெரும் சர்ச்சைகளை கிளப்பியிருக்கும் நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரிலீசான ‘கோலிசோடா’ படமோ திருட்டு திரைக்கதை விவகாரத்தில் சிக்கியிருக்கிறது.
அதன் டைரக்டரும், ஒளிப்பதிவாளருமான விஜய்மில்டன் தன்னிடம் கதை சொல்லிவிட்டுப் போன ஒரு துணை இயக்குனரின் திரைக்கதையை அப்படியே முதல் பாதியாக படமாக்கி ரிலீஸ் செய்திருக்கிறார் என்ற பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைப்பற்றி ஒரு நண்பர் எழுதியிருக்கும் கட்டுரையை படியுங்கள்.
நண்பர்களே…
நேற்று ‘கோலிசோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்…இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கியது.
இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ‘அழகாய் இருக்கிறாய்…பயமாய் இருக்கிறது’ என்ற மொக்கைப் படத்தின் மூலமாக அறிந்திருக்கிறோம். ஒளிப்பதிவிலும் அரைவேக்காடு என்பதை பல படங்களிலும் கண்டு உணர்ந்திருக்கிறோம்.
குறிப்பாக… ‘வழக்கு எண் 18\2′.
‘வழக்கு எண்ணில்’ இவர் செய்த குளறுபடிகளை இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் நேரிடையாகவே தெரிவித்து இருக்கிறேன்.
எந்தவித சால்ஜாப்பும் சொல்லாமல் அவர் அக்குறைகளை ஒத்துகொண்டார்.
‘அரைவேக்காடு’ விஜய் மில்டன் எப்படி ‘கோலிசோடா’ என்ற படத்தை இடைவேளை வரை அற்புதமாக வழங்க முடிந்தது?
அற்புதம் நிகழ்த்தியவர் என் நண்பர் திரு.விஸ்வாமித்ரன்.
விஸ்வாமித்ரன் சினிமாவின் மொழி தெரிந்தவர். இயக்குனர் பிரசன்ன விதாநாயகேவிடம் இணை இயக்குனராகவும்,
திரைக்கதை உருவாக்கத்திலும் விஸ்வாமித்ரன் பணியாற்றியவர்.
விஸ்வாமித்ரன் கோயம்பேடு மார்க்கெட்டிலேயே வாழ்ந்து ஒரு திரைக்கதையை ‘விஜய் மில்டனுக்காக’ உருவாக்கினார்.
உருவாக்கியதை விஜய்மில்டனிடம் நேரிடையாக சொல்லியும் விட்டார்.
முழுக்கதையை கேட்டுவிட்டு பிரமாதமாக உருவாக்கி இருக்கிறீர்கள் என கை கொடுத்து அனுப்பி விட்டார் விஜய் மில்டன்.
அதோடு சரி… விஜய் மில்டன் கொஞ்ச காலம் ‘கமுக்கமாக’ இருந்து விட்டு ‘கோலி சோடா’ விளம்பரத்தை வெளியிடுகிறார்.
அதை பார்த்து விஸ்வாமித்ரன் அதிர்ச்சியாகி விட்டார்.
இப்பேரதிர்ச்சி, விஸ்வாமித்ரனை மிகக்கடுமையாக தாக்கி…நோயாளியாக்கி வீழ்த்தி விட்டது. இரண்டு வருடம் கழித்து இப்போதுதான் கொஞ்சம் மீண்டு இருக்கிறார். இன்னும் அவருக்கு உடல் ரீதியான உபாதைகள் தொடர்கிறது.
கோடம்பாக்கம் எப்போதுமே விஸ்வாமித்ரனை தடித்து சுண்ணாம்பு தடவிதான் வந்திருக்கிறது.
இது புதிதல்ல!
கோலி சோடா பார்த்து வியந்த எல்லோரும் ‘பொக்கே’ கொடுக்க லைனில் நிற்பார்கள்.
உண்மை அறிந்ததால், நான் ‘கருப்புக்கொடி’ காட்டுகிறேன்.
படம் பாருங்கள்.
ஆச்சரியங்கள்…விஸ்வாமித்ரனுக்கு சொந்தம்.
அபத்தங்கள்…விஜய்மில்டனுக்கு சொந்தம்.
அடேய் விஜய் மில்டா…வாழ்வதற்காக வல்லவனை வீழ்த்தினாய். குறுகிய கால வளர்ச்சியும்…புகழ்ச்சியும்…
உன்னை எதிர்காலத்தில் அடையாளம் காட்டும். அப்போது விஸ்வாமித்ரன் ஆலமரமாய் வளர்ந்து நிற்பார்.
அந்த ஆலமரத்தின் விழுதுகள் உனக்காக காத்திருக்கும்.
No comments:
Post a Comment