Search This Blog

Friday, 6 September 2013

தேன்மொழிக்குப்பதிலாக மீனாட்சி என்று டயலாக்கை மாற்றிப்பேசிய மிர்ச்சி செந்தில்!

தேன்மொழிக்குப்பதிலாக மீனாட்சி என்று டயலாக்கை மாற்றிப்பேசிய மிர்ச்சி செந்தில்!

சின்னத்திரையில் சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் புகழ் பெற்றவர் செந்தில். இவர் கண்களின் வார்த்தைகள் படம் மூலம் சினிமாவிலும் கதாநாயகனானார். அப்படம் வெற்றி பெறாதபோதும் அடுத்தபடியாக இப்போது வெண்நிலா வீடு என்ற படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

அரும்புமீசை குறும்புப்பார்வை படத்தை இயக்கிய வெற்றிவீரன் இந்த வெண்நிலா வீடு படத்தை வெற்றி மகாலிங்கம் என்ற பெயரில் இயக்கியுள்ளார். அஞ்சாதே விஜயலட்சுமி, கேரள வரவு சிருந்தா, வழக்கு எண் முத்துராம், ப்ளாக் பாண்டி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு தன்ராஜ் மாணிக்கம் இசையமைக்க, வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

இப்படம் பற்றி மிர்ச்சி செந்தில் கூறுகையில், சினிமாவில் அழுத்தமான கதையாக நான் தேடிக்கொண்டிருந் தபோதுதான் இந்த வாய்ப்பு கிடைத்தது. டைரக்டர் கதை சொல்லி முடித்ததுமே என் கண்கள் கலங்கி விட்டது.அந்த அளவுக்கு உணர்வுப்பூர்வமான கதை. அதனால் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நானும் ஒரு நிலையான நடிகனாகி விடுவேன் என்றார்.

அப்போது, சரவணன்-மீனாட்சியில் அந்யோன்யமாக நடிக்கும் நீங்கள், இந்த படத்தில் விஜயலட்சுமியுடன் நடித்தது பற்றி சொல்லுங்கள்? என்று கேட்டபோது, விஜயலட்சுமி சின்சியரான ஆர்ட்டிஸ்ட். அதனால் அவருடன் நடித்தபோது சரவணன்-மீனாட்சி தொடரில் நடிப்பதை விட அதிக இன்வால்வ்மெண்டோடு நடித்தேன் என்றார்.

ஆனால், அவர் அருகில் இருந்த விஜயலட்சுமியோ, செந்திலிடமிருந்து மைக்கை பிடுங்கி, அப்படியெல்லாம் இல்லை. ஒரு காட்சியில் இந்த படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் என்பெயரை கூப்பிட்டுக்கொண்டே அவர் ஓடிவரும் காட்சியில், தேன்மொழி என்பதற்கு பதிலாக மீனாட்சி மீனாட்சி என்று கத்திக்கொண்டே ஓடி வந்தார். ஆக, வேறு நடிகையுடன் நடிக்கும்போதும் அவர் மீனாட்சி ஞாபகத்திலேதான் இருக்கிறார் என்று கிண்டலாக சொல்ல, தடுமாறிப்போனார் செந்தில்.

No comments:

Post a Comment