ஐ-க்கு பிறகே அடுத்த படம்! எமி புதிய முடிவு!!
மதராசப்பட்டினம் படத்துக்காக டைரக்டர் விஜய் இறக்குமதி செய்த ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். முதல் படத்திலேயே அற்புதமாக நடித்து ரசிக உள்ளங்களை கொள்ளை கொண்ட அவருக்கு, அடுத்த படமாக இந்தி விண்ணைத்தாண்டி வருவாயா அமைந்தது. அதன்பிறகு அதே விஜய் இயக்கத்தில், தாண்டவம் படத்தில் நடித்த எமி ஜாக்சன், இப்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் ஷங்கர் படங்களின் வழக்கமான கதாநாயகிகளைப்போன்று எமியை அழகு தேவதையாக காண்பிக்கும் பிரமாண்ட பாடலும் உள்ளதாம். அதோடு, அவருக்கும், விக்ரமுக்கும் இடையிலான ரொமான்ஸ் காட்சிகளை புதுமையான முறையில் படமாக்கி வருகிறாராம் ஷங்கர். அதனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்தில் அதிக ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார் எமி.
இந்த நிலையில், ஐ படத்துக்குப்பிறகு எமியின் மார்க்கெட் எகிறி விடும் என்பதை யூகித்து விட்ட கோலிவுட் படாதிபதிகள் இப்போதே ஒரு அட்வான்ஸ் கொடுத்து புக் பண்ணி வைக்க எமியை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளனர். ஆனால், அவரோ, ஐ படத்துக்குப்பிறகுதான் அடுத்த படத்திற்கான கதையையே கேட்பேன் என்று நழுவிக்கொண்டு வருகிறாராம்.
ஆனால் இதற்கு காரணம் எமி இல்லையாம். அப்படத்தின் முக்கியஸ்தர்கள்தான், இப்போது வெவ்வேறு கதைகளை மனதில் போட்டு குழப்பினால் இந்த படத்திற்கான அவுட்புட் போய் விடும். அதனால், அடுத்த படத்திற்கான கதையை இந்த படம் முடிந்த பிறகுதான் கேட்க வேண்டும் என்று எமிக்கு க்ண்டிசன் போட்டு வைத்திருக்கிறார்களாம்.
No comments:
Post a Comment